திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில், கார்த்திகை திருநாளான இன்று (நவ. 24) ஒருநாள் மட்டும் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புக்கு பல்வேறு எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இதனிடையே, உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்தது. இந்தச் சீராய்வு மனு மீது விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு விசாரிக்கப்படவில்லை.
இதனிடையே, மதுரை மாவட்டம் முழுவதும் BNSS 163 விதியின் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, மதுரை மாவட்டம் முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கிடையே, திருப்பரங்குன்றத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் விதமாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை போலீசார் வீட்டுக்காவலில் வைத்துள்ளனர். இதேபோல, பல்வேறு பாஜக நிர்வாகிகளும் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து மதுரை திருப்பரங்குன்றத்திற்குக் கையில் வேலுடன் புறப்படத் தயாரான பாஜக மாநில மகளிரணித் தலைவர் கவிதா ஸ்ரீகாந்த் மற்றும் அவரது கணவர் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து வீட்டுக் காவலில் வைத்துள்ளனர்.
இதேபோல, மேட்டுப்பாளையம் முகாம் அலுவலகத்தில் இருந்து திருப்பரங்குன்றம் நோக்கிச் சென்று கொண்டிருந்த பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர் எல். முருகன், அன்னூர் பேருந்து நிலையம் அருகே காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி இல்லம் முன்பு காவல்துறையைக் குவித்து, அவரையும் பாஜக நிர்வாகிகளையும் சட்டவிரோதமாக வீட்டுக்காவலில் முடக்கும் தவெக அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.
ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவரையே சட்டவிரோதமாக முடக்குவது பாசிசத்தின் உச்சம்! காவல்துறையை ஏவி அரசே அச்சுறுத்தலையும் பதற்றத்தையும் உருவாக்குவது ஜனநாயகத்திற்கும் சட்டம் ஒழுங்கிற்கும் விடுக்கப்படும் அச்சுறுத்தலாகும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள பதிவில், “திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்று தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனையும், இந்து அமைப்புகளின் நிர்வாகிகளையும் வீட்டுக் காவலில் வைத்துள்ள தமிழக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது! நீதிமன்றத் தீர்ப்பை மதித்து செயல்படுத்த வேண்டிய அரசு, அதற்காகக் குரல் கொடுப்பவர்களையும், போராடுபவர்களையும் காவல்துறையைக் கொண்டு ஒடுக்க முயல்வது ஏன்? சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டிய காவல்துறையை, மக்களின் உரிமைக் குரலை அடக்கப் பயன்படுத்துவது ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல” எனத் தெரிவித்துள்ளார்.