ட்யூட் விக்கி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி வந்த ‘மண்ணாங்கட்டி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.
பாலிவுட்டில் கடந்த ஆண்டு வெளிவந்த ஜவான் படத்தை தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் வெளிவந்த அன்னபூரணி திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதனையடுத்து நயன்தாரா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’. ‘ப்ளாக் ஷீப்’ யூடியூப் சேனல் புகழ் ட்யூட் விக்கி இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சான் ரோல்டன் படத்துக்கு இசையமைக்கிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கோலமாவு கோகிலா, அண்ணாத்த படத்திற்கு பிறகு இப்படத்தில் யோகிபாபு நடித்துள்ளார். மேலும் தேவதர்ஷினி, கௌரி கிஷன், நரேந்திர பிரசாத் என பலர் நடித்துள்ளனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இறுதிகட்டப் பணிகள் முடிந்து விரைவில், படத்தை திரைக்குக் கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.