31.4 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் சினிமா

அசரவைத்த உணவுகள்; நயன்-விக்கி திருமணத்தின் மெனு கார்டு

நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்தின் மெனு கார்டு தற்போது வைரலாகியுள்ளது.

சென்னை மாமல்லபுரம் அருகே ஷெரட்டன் கிராண்ட்  கடற்கரை நட்சத்திர விடுதியில் நடிகை நயன்தாரா – இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் இன்று காலை நடைபெற்றது. 15க்கும் மேற்பட்ட புரோகிதர்கள் வேத மந்திரங்கள் ஓத, நாதஸ்வரக் கலைஞர்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க காலை 10.20 மணியிலிருந்து 10.25 மணிக்குள் நயன்தாராவின் கழுத்தில் மகிழ்ச்சியுடன் தாலி கட்டினார் விக்னேஷ் சிவன்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பங்கேற்ற பிரபலங்கள்

நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாருக்கான், சரத்குமார், சூர்யா, ஜோதிகா, விஜய் சேதுபதி , கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, விக்ரம் பிரபு, ஜெயம் ரவி, அட்லி , அனிருத் , போனி கபூர் , இயக்குநர் மணிரத்னம், சுஹாசினி , இயக்குநர் சிறுத்தை சிவா, கௌதம் மேனன் , ஹரி, அர்சனா கல்பாதி, ராதிகா , கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் திருமணத்தில் கலந்து கொண்டனர்.

திருமணத்தின் புகைப்படங்களும் காணொளிகளும் வெளியில் கசிந்து விடக்கூடாது என்று கடும் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற இந்த திருமணத்திற்கு வருகை தந்த முன்னணி நடிகர்கள் கூட விஐபி , விவிஐபி என வகைப்படுத்தி அனுப்பிவைக்கப்பட்டனர்.

விவிஐபி வரிசையில் வந்த நடிகர் ரஜினிகாந்த், நடிகர் சரத்குமார், நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தி, நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் மட்டுமே தங்களுடைய அலைபேசியை கையில் எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டனர். விஐபி பிரிவில் அனுமதிக்கப்பட்ட நடிகர்களும், முன்னணி நடிகர்களின் குடும்பத்தினரும் அலைபேசியின் கேமரா மறைக்கப்பட்டு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்.

பரிமாறப்பட்ட உணவு வகைகள்

திருமணத்திற்கான மெனு கார்டும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி, சைவத்தில் பொன்னி அரிசி சோறு, பன்னீர் பட்டாணி குழம்பு, பருப்பு குழம்பு, அவியல், மோர் குழம்பு, செட்டிநாடு குழம்பு, உருளை கார மசாலா, வாழக்காய் வறுவல், சேனைக் கிழங்கு வறுவல், சேப்பக் கிழங்கு புளிக் குழம்பு ஆகியவை தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டன.

காளான் மிளகு வறுவல், கேரட் மற்றும் பீன்ஸ் பொறியல், காய் பொறிச்சது, காதல் பிரியாணி ( பலாப்பழ பிரியாணி), சாம்பார் சோறு, தயிர் சோறு, பூண்டு மிளகு ரசம், தயிர், வெஜிடபிள் ரைத்தா, வடகம் மற்றும் வத்தல்கள், அப்பளம் போன்றவையும், கூடுதலாக பாதாம் அல்வா, இளநீர் பாயாசம், ஐஸ் க்ரீம் ஆகியவையும் விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டன.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App –ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading