நடிகை நயன்தாரா தற்போது சென்னையில் பிரபல திரையரங்கு ஒன்றை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து, தற்போது இரண்டு குழந்தைகளுடன் சென்னையில் வாழ்ந்து வருகிறார். தனது கணவருடன் சேர்ந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் ஆரம்பித்து, படங்களைத் தயாரித்தும் வருகிறார். ‘சாய் வாலே’ என்ற டீக்கடை வியாபாரத்திலும் பெரும் முதலீடு செய்து அத்தனையும் நடத்தி வரும் நயன்தார தற்போது சென்னையில் பிரபலமாக இருந்து, இழுத்து மூடப்பட்ட, திரையரங்கமான அகஸ்தியா என்ற திரையரங்கை தற்போது வங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சில ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த இந்த திரையரங்கை தன் நண்பர்களுடன் இணைந்து வாங்கிய நயன்தாரா அப்பகுதியில் மேலும் இரண்டு தியேட்டர்களைக் கட்டவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அதற்கான பணிகள் தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா







