விஜய்யின் 68வது திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தளபதி விஜய் நடித்து வரும் 67 வது திரைப்படம் ‘லியோ’. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தின் மூலம் நடிகர் விஜய்யுடன் லோகேஷ் 2-வது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் கிளைமாக்ஸ் காட்சிகள் ஹைதராபாத்தில் படமாக்கப்பட உள்ளதாகவும், இன்னும் ஓரிரு மாதங்களில் படம் முழுமையாக முடிக்கப்பட்டு வருகிற அக்டோபர் மதம் படத்தினை ரிலீஸ் செய்ய வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக விஜய் நடிக்கும் ’தளபதி 68’ படம் குறித்த தகவல்கள் கசிந்து வருகின்றன. அதுவும் லியோ படமே இன்னும் ரிலீஸ் ஆகாத நிலையில், அதற்குள் விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள தளபதி 68 படம் குறித்த அப்டேட் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.
முதலில் தளபதி 68 அட்லீ இயக்குவார் என கூறப்பட்ட நிலையில், பின்னர் அவர் பாலிவுட்டில் பிசியானதால் பிரபல தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் இயக்க இருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து இந்த பட்டியலில், வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்புராஜின் பெயரும் அடிபட்டது.
https://twitter.com/actorvijay/status/1660207802818904065?s=20
இந்நிலையில் ’தளபதி 68’ திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்க இருப்பதாகவும் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் இந்தப் படத்தை தயாரிக்கவிருப்பதாகவும் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா தான் இசையமைக்க உள்ளார்.யுவன் கடைசியாக விஜய்யின் புதிய கீதை படத்திற்கு இசையமைத்து இருந்தார். சுமார் 20 ஆண்டுகள் கழித்து விஜய்யுடன் யுவன் கூட்டணி அமைத்துள்ளார். இதனால் இருதரப்பு ரசிகர்களும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
.








