அடுத்தப் படத்தை அறிவித்த நயன்தாரா, விக்னேஷ் சிவன்

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து தங்களது ரவுடி பிக்சர்ஸ் சார்பாக ’ஊர்குருவி’ என்ற படத்தை தயாரிக்கின்றனர். ரவுடி பிக்சர்ஸ் சார்பில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து அடுத்தடுத்து படங்களை தயாரித்து வருகின்றனர்.…

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து தங்களது ரவுடி பிக்சர்ஸ் சார்பாக ’ஊர்குருவி’ என்ற படத்தை தயாரிக்கின்றனர்.

ரவுடி பிக்சர்ஸ் சார்பில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து அடுத்தடுத்து படங்களை தயாரித்து வருகின்றனர். அவர்கள் தயாரிப்பில், விருதுகளை அள்ளி குவித்து வரும் ’கூழாங்கல்’ மற்றும் அதிர்ச்சி மிகுந்த படைப்பாக உருவாகியுள்ள ’ராக்கி’ ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன.

இந்நிலையில், இந்நிறுவனம் ’ஊர்குருவி’ (க்-கை விட்டுட்டாங்க, நியூமராலாஜி?) என்ற படத்தைத் தயாரிக்கிறது. முழுக்க காமெடி டிராமாவாக இந்தப் படம் உருவாகிறது. இதில் கவின் நாயகனாக நடிக்கிறார். விக்னேஷ் சிவனிடம் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் உதவி இயக்குநராகவும் இயக்குநர் அஜய் ஞானமுத்துவிடம் டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றிய அருண் இந்தப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இதுகுறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் கூறியதாவது: அருணின் ஐடியாக்களும் தெளிவான சிந்தனையும் என்னை எப்போதும் ஆச்சர்யப்படுத்திக் கொண்டே இருக்கும். ரவுடி பிக்சர்ஸ் சார்பில், “ஊர்குருவி” படம் மூலம் அவரை இயக்குநராக அறிமுகம் செய்வது மகிழ்ச்சியாக உள்ளது. இதில் நடிக்க பெரிய நட்சத்திரங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தமிழ்நாட்டின் தென் பகுதிகளில் இதன் ஷூட்டிங் நடக்க இருக்கிறது. இந்தப் படம், ரசிகர்களுக்கு இன்பயமான அனுபவத்தை தரும். இவ்வாறு கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.