முக்கியச் செய்திகள் இந்தியா

அட, 550 கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்!

மும்பையைச் சேர்ந்த ஒருவர் தனது பிறந்தநாளை முன்னிட்டு 550 கேக்குகளை வெட்டி அட்டகாசமாக கொண்டாடி உள்ளார்.

பிறந்தநாள் என்றால் அது அனைவருக்கும் ஸ்பெஷலான நாள். அனைவரும் அவரவர் பிறந்தநாளை தங்களுக்கு பிடித்தமாதிரி கொண்டாட நினைப்பார்கள். பிடித்த ஆடை, பிடித்த கேக், உணவு என்று பிறந்தநாள் விழாவில் எல்லாம் ஸ்பெஷலாக இருக்கும். ஆனால் முப்பையைச் சேர்ந்த சூர்யா ரத்தூரி தனது பிறந்தநாளை முன்னிட்டு 550 கேக்குகளை வெட்டியுள்ளார். ஒரு கேக், 2 கேக் இல்ல பாஸ் 550 கேக்குகளை வெட்டியிருக்கிறார்.

3 மேஜைகளில் வைக்கப்பட்ட வெவ்வேறு ஃபிளேவர்கள் கொண்ட கேக்குளை சுமார் 2.5 நிமிடங்களில் அவர் வெட்டினார். இவர் கேக் வெட்டும் வீடியோ பதிவு செய்யப்பட்டு சமூகவலைதளத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் பிறந்தநாள் விழாவிற்கு வருகை தந்தவர்கள் சூர்யா ரத்தூரியை ஆரவாரம் செய்து, வேகமாக கேக்குகளை வெட்டச் சொல்கின்றனர். இதுபோன்று தமிழகத்திலும் கத்தியை வைத்து கேக்கை வெட்டியவர்களை காவல்துறையினர் கைது செய்த நிகழ்வுகளும் நடந்திருக்கிறது.

Advertisement:
SHARE

Related posts

இறந்து போன தாய் அருகே இரண்டு நாட்களாகப் பட்டினி கிடந்த 18 மாதக் குழந்தை!

Ezhilarasan

மழை பாதிப்பு; 25 ஆண்டுகளாக சரி செய்யப்பட்டாத பாதாள சாக்கடை

Ezhilarasan

போதைக்காக 5 லிட்டர் சானிடைஸரை குடித்த 3 பேர் உயிரிழப்பு!

Niruban Chakkaaravarthi