நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமண விழாவில் பாதுகாப்பு பணியில் 80-க்கும் மேற்பட்ட பவுன்சர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நடிகை நயன்தாரா-டைரக்டர் விக்னேஷ் சிவன் 6 வருடங்களாக காதலித்து இப்போது திருமணத்துக்கு தயாராகி உள்ளனர். இவர்கள் திருமணம் மாமல்லபுரம் அருகே கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று காலை நடக்கிறது. அங்கு திருமணத்துக்காக பிரத்யேகமாக விசேஷ கண்ணாடி மாளிகை போன்று அரங்கு அமைத்துள்ளனர். ஓட்டலில் விருந்தினர்களுக்காக அதிக அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளன.
திருமண விழாவையொட்டி விக்னேஷ் சிவனின் சகோதரிக்கு நயன்தாரா 30 பவுன் தங்க நகை வாங்கி பரிசளித்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவரது நெருங்கிய உறவினர்கள் அனைவருக்கும் தனித்தனியாக பரிசு பொருட்கள் வழங்கி இருக்கிறார்.
திருமணம் நடைபெறும் கடற்கரை விடுதியின் முன்புறம், கடற்கரைப் பகுதி என அனைத்து இடத்திலும் 80க்கும் மேற்பட்ட பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
நடிகை நயன்தாராவின் திருமணம் இன்னும் சற்று நேரத்தில் மாமல்லபுரம் அருகில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தொடங்க இருக்கின்றது.
இந்நிலையில் திருமண விழாவிற்கு பாதுகாப்பு வழங்குவதற்காக தனியார் காவலர்களான பவுன்சர்கள் 80க்கும் மேற்பட்டவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர் . மண்டபத்திற்கு உள்ளே மட்டுமின்றி , மண்டபத்திற்கு பின்புறம் கடற்கரை வழியாக யாரும் உள்ளே நுழைய கூடாது என்பதற்காகவும், புகைப்படம் எடுத்துவிட கூடாது என்பதற்காகவும் அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மண்டபத்தின் உள்ளேயும் விருந்தினர்கள் யாரும் புகைப்படம் எடுத்துவிடாமல் இருப்பதற்காக பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், மடிப்பாக்கம் மீனாட்சி சுந்தரேஷ்வர் கோயில், சென்னை காளிகாம்பாள் கோயில், நங்கநல்லூர் கருமாரி அம்மன் கோயிலை சேர்ந்த 15 புரோகிதர்கள் நயன்தாரா திருமணத்திற்கு வருகை புரிந்துள்ளனர்.
காலை 8.30 மணி முதல் 10.30 மணிக்குள்ளாக திருமண நடைபெற உள்ளது. உள்ளே செல்ல கூடிய நபர்களின் செல்போன் கேமராக்கள் முழுவதுமாக மறைக்கப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். ரஜினிகாந்த், விஜய், அஜித், பிரபு, விஜய் சேதுபதி உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.








