ஆசிய கோப்பை கால்பந்து – கம்போடியாவை வென்றது இந்தியா

ஆசிய கோப்பை கால்பந்து போட்டியின் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 2-க்கு 0 என்ற கணக்கில் கம்போடியா அணியை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது.   ஆசிய கோப்பை 2023-க்கான தகுத்திப் போட்டிகள் இந்தியாவில்…

ஆசிய கோப்பை கால்பந்து போட்டியின் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 2-க்கு 0 என்ற கணக்கில் கம்போடியா அணியை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது.

 

ஆசிய கோப்பை 2023-க்கான தகுத்திப் போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வருகின்றன. 30 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் இந்த தொடரின் லீக் ஆட்டம் , நேற்று கொல்கத்தாவில் உள்ள விவேகானந்தா யுவபாரதி கால்பந்து மைதானத்தில் நடைபெற்றது. இந்த பேட்டியில் இந்தியா மற்றும் கம்போடியா அணிகள் மோதின.

 

ஆட்டத்தின் 15-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், கேப்டன் சுனில் சேத்ரி அந்த வாய்ப்பை கோல் ஆக்கினார். பேட்டியின் இரண்டாம் பாதியில் 60-வது நிமிடத்தில், மீண்டும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, சுனில் சேத்ரி இரண்டாவது கோலை அடித்து அசத்தினார். பின்னர் கம்போடியா அணி கடைசி வரை போராடியது. இருந்தபோதிலும் இந்திய வீரர்கள் ஒரு கோல் கூட எதிரணியை எடுக்க விடவில்லை. இதனால், 2-க்கு 0 என்ற கணக்கில் இந்திய அணி கம்போடியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

நேற்றைய போட்டியில் கேப்டன் சுனில் சேத்ரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் இரண்டு கோல்கள் அடித்ததன் மூலம் அவரது சர்வதேச கோல்கள் 82-ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்திய அணி கம்போடியாவை வீழ்த்தியதால் மூன்று புள்ளிகளை பெற்றதோடு, ஆசிய கோப்பையில் 5-வது இடத்தை பிடிக்கும் முயற்சியில் உள்ளது.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.