முக்கியச் செய்திகள் உலகம் கொரோனா

3-வது டோஸ் தடுப்பூசிக்கு அனுமதி கோரும் பைசர்

அமெரிக்கா மருந்து நிறுவனமான பைசர், தனது தடுப்பூசியின் மூன்றாவது டோஸை மக்கள் செலுத்துக் கொள்வது குறித்து அந்நாட்டு அரசிடம் அனுமதி கோரியுள்ளது.

கொரோனா தொற்றுக்கு எதிராக பைசர் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த பயோடெக் நிறுவனம் இணைந்து பைசர் தடுப்பூசியைத் கண்டுபிடித்துள்ளது. உலகளவில் பலநாடுகளில், பைசர் தடுப்பூசி கொரோனா வைரசுக்கு எதிராகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது கூறப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் உருமாற்றம் பெற்று வருவதின் காரணத்தால், இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் அடுத்த 12 மாதத்திற்குள் மூன்றாவது டோஸை செலுத்திக் கொண்டால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி ஐந்திலிருந்து பத்து மடங்கு அதிகரிக்கும் எனத் தெரிவிக்கும் பைசர் நிறுவனம் அதற்கான அனுமதியை அமெரிக்கா அரசிடம் கோரியுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

”தமிழகத்தில் 2,000 மினி கிளினிக்குகள் திறக்கப்படும்”- முதல்வர் பழனிசாமி!

Jayapriya

முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று!

Halley karthi

மதுரையில் மீன் வாங்க சமூக இடைவெளியின்றி ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்

Gayathri Venkatesan