12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம்

12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, தொழிற்சங்கத்தினர் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில், தொழிலாளர்களுக்கு எதிரான தொகுப்பு சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் மற்றும்…

12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, தொழிற்சங்கத்தினர் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில், தொழிலாளர்களுக்கு எதிரான தொகுப்பு சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் மற்றும் அத்தியாவசிய பாதுகாப்பு பணிகள் சட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளர். மேலும், வேளாண் சட்டங்களை ரத்து செய்தபோதிலும், சம்யுக்த கிசான் மோர்ச்சா முன்வைத்துள்ள இதர ஆறு கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்றும், தேசியப் பணமாக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன.

அங்கன்வாடி, ‘ஆஷா’ ஊழியர்கள், மதிய உணவு ஊழியர்களுக்கும் இதரத் திட்ட ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியத்துடன் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். முறைசாராத் தொழிலாளர்கள் அனைவருக்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களைக் கொண்டுவர வேண்டும். வருமானவரி செலுத்தாத அனைத்துக் குடும்பத்தினருக்கும் மாதந்தோறும் 7,500 ரூபாய் உணவு மற்றும் வருமான ஈடாக அளித்திட வேண்டும் என்றும் தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அண்மைச் செய்தி: “கோலாகலமாகத் தொடங்கியது ஆஸ்கர் விருது விழா”

மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின்கீழ் ஒதுக்கீட்டை அதிகப்படுத்தி நகர்ப்புறங்களுக்கும் விரிவாக்கம் செய்ய வேண்டும். கொரோனா தொற்றின்போது பணியாற்றிய முன்கள தொழிலாளர்கள் அனைவருக்கும் முறையான பாதுகாப்பு மற்றும் காப்பீட்டு வசதிகளை அளித்திட வேண்டும். வேளாண்மை, கல்வி, சுகாதாரம் மற்றும் முக்கியமான பொதுப் பணிகளில் பொது முதலீட்டை அதிகரித்து, பணக்காரர்கள் மீது செல்வ வரி விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், பெட்ரோலிய பொருட்களின் மீதான கலால் வரியைக் கணிசமாகக் குறைத்து விலைவாசியைக் கட்டுப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்கள், திட்ட ஊழியர்கள் அனைவருக்கும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவர வேண்டும் ஆகிய 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.