இந்த ஆண்டிற்கான, 94வது ‘ஆஸ்கர்’ விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில், கோலாகலமாக துவங்கியது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் இந்த ஆண்டிற்கான, 94வது ‘ஆஸ்கர்’ விருது வழங்கும் விழா கோலாகலமாக தொடங்கியது. இதில் ஏராளமான ஹாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதில் டெனிஸ் வில்லெனுவ் இயக்கத்தில் வெளியான ‘Dune’ திரைப்படம் ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, இசை, படத்தொகுப்பு, தயாரிப்பு வடிவமைப்பு, விஷுவல் எபக்ட்ஸ் ஆகிய 6 பிரிவுகளில் விருதுகளை குவித்தது.
‘West Side Story’ படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதை அரியானா டிபோஸ் வென்றார்.சிறந்த துணை நடிகருக்கான விருது ‘Coda’ திரைப்படத்தில் நடித்த ட்ராய் கோட்சருக்கு வழங்கப்பட்டது.








