தேசிய திரைப்பட விருதுகள் விழா: விருதுகளை குவித்த தமிழ் திரைப்படங்கள்!

72-வது தேசிய திரைப்பட விழாவில் நடிகர் தனுஷ், ஜிவி பிரகாஷ் உள்ளிட்ட பலர் விருதுகளைப் பெற்றனர்.

தேசிய திரைப்பட விருதுகள் (National Film Awards) இந்தியத் திரைப்படத்துறையில் சிறந்து விளங்கும் கலை மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களைக் கௌரவிப்பதற்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இது இந்திய திரைப்படத் துறையின் உயரிய மற்றும் மதிப்புமிக்க விருதாக கருதப்படுகிறது.

அதன்படி 2024 -ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான 72-வது தேசிய திரைப்பட விருது விழா குஜாராத் மாநிலம் ஏக்தா நகரில் இன்று நடைபெற்றது. 2024 -ஆம் ஆண்டுக்கான விருதுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று கலைஞர்களுக்கு குடியரசு தலைவர் விருதுகளை வழங்கினார். இதில் தமிழ்திரையுலகில் பலரும் விருதுகளை பெற்றனர். அதன்படி, நடிகர், இயக்குநர் என பல அவதாரங்களை கொண்ட தனுஷ் இரண்டு தேசிய விருதுகளை பெற்றார். தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புகளை முன்னிறுத்தும் சிறந்த திரைப்படம் என்ற பிரிவில் ‘கேப்டன் மில்லர்’ படத்திற்காகவும், சிறந்த தமிழ் திரைப்படம் பிரிவில் ‘ராயன்’ படத்திற்காகவும், ‘கேப்டன் மில்லர்’ படத்திற்காக ஸ்பெஷல் மென்ஷன் (நடிகர்) பிரிவிலும் நடிகர் தனுஷ் தேசிய விருதுகளை பெற்றார்.

அதேபோல டி. எஸ். ஹரி ஹர சுதா திரைப்படம் அல்லாத பிரிவில் ‘Blue’என்ற குறும்படத்திற்காக சிறந்த ஒலி வடிவமைப்புக்கான விருதை பெற்றார்

அனல் அரசு, ‘மகாராஜா’ படத்திற்காக சிறந்த சண்டைப் பயிற்சிக்கான தேசிய விருதை பெற்றார்

ஜி.வி. பிரகாஷ், குமார் ‘அமரன்’ படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை பெற்றார்

ஆர். கலைவாணன், ‘அமரன்’ படத்திற்காக சிறந்த படத்தொகுப்புக்கான தேசிய விருதை பெற்றார்

ராஜ்குமார் பெரியசாமி , ‘அமரன்’ படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை பெற்றார்

இயக்குநர் அருண் மாதேஸ்வரன், ‘கேப்டன் மில்லர்’ படத்திற்காக தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புகளை முன்னிறுத்தும் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை பெற்றார்

சுரேன் ஜி, ‘மெய்யழகன்’ படத்திற்காக ஸ்பெஷல் மென்ஷன்(சவுண்ட் மிக்ஸ் இன்ஜினியர்) பிரிவில் தேசிய விருதை பெற்றார்

அதேபோல ஷெஹ்னாத் ஜலால், ‘பிரம்மயுகம்’ படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருதை பெற்றார்

நடிகர் மம்மூட்டி, ‘பிரம்மயுகம்’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார்

இயக்குநர் வெங்கி அட்லூரி, ‘லக்கி பாஸ்கர்’ படத்திற்காக சிறந்த திரைக்கதை (வசன எழுத்தாளர்) பிரிவில் தேசிய விருதை பெற்றார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.