மாறி வரும் உலகிற்கு ஏற்றவாறு தேசிய கல்விக்கொள்கை 2020 கொண்டு வரப்பட்டது -ஆளுநர் ஆர்.என்.ரவி

மாறி வரும் உலகிற்கு ஏற்றவாறு அனைத்தையும் எதிர்கொள்ளும் வகையில் பழைய பாடத்திட்டத்தை மாற்றவே தேசிய கல்விக்கொள்கை 2020 கொண்டு வரப்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இந்திய குடிமைப்பணி தேர்வெழுத பயிற்சி பெறும் மாணவர்களுடன்…

மாறி வரும் உலகிற்கு ஏற்றவாறு அனைத்தையும் எதிர்கொள்ளும் வகையில் பழைய பாடத்திட்டத்தை மாற்றவே தேசிய கல்விக்கொள்கை 2020 கொண்டு வரப்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

இந்திய குடிமைப்பணி தேர்வெழுத பயிற்சி பெறும் மாணவர்களுடன் எண்ணி துணிக என்ற தலைப்பில் ஊக்கம் தரும் வகையில் ஆளுநர் ஆர் என் ரவி ராஜ்பவனில்
கலந்துரையாடினார்.

இந்த கலந்துரையாடலில் மாநிலம் முழுவதிலும் இருந்து 200க்கும் மேற்பட்ட
மாணவர்கள் பங்கேற்று தங்கள் கேள்விகளை, சந்தேகங்களை ஆளுநரிடம் கேட்டனர்.
இந்திய குடிமைப் பணிகளுக்கு தேர்வு எழுதும் பொறியியல் பட்டதாரிகள், மருத்துவ
மாணவர், கலை அறிவியல் பட்டதாரிகள், விவசாய பட்டதாரிகள் பலர் இதில்
பங்கேற்றனர்.

இந்த கலந்துரையாடலில் பேசிய ஆளுநர், தேசிய கல்விக் கொள்கை 2020 எதற்காக கொண்டு வரப்பட்டது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். மாறி வரும் உலகிற்கு ஏற்றவாறு அனைத்தையும் எதிர்கொள்ள பழைய பாடத்திட்டத்தை மாற்றுவது அவசியமாகியது.வெறும் பட்டங்களுக்காக வேலை கிடைக்கும் நிலை இப்போது இல்லை. செயல்திறன் எப்படி இருக்கிறது, அறிவுத்திறன் எப்படி இருக்கிறது, சிந்தனை அனைத்தையும் கருத்தில் கொண்டு தான் இப்போது வேலை கிடைக்கிறது. Critical thinking ஐ அதிகரிக்கும் வகையிலேயே புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.


அத்துடன், பாகிஸ்தான் நமது பொருளாதாரத்தை குலைக்க நினைத்தால் தீவிரவாதத்தை கையில் எடுப்பார்கள். அமெரிக்காவில் 9/11 தாக்குதலுக்கு முன் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக இல்லை. அமெரிக்கா தாக்கப்பட்ட பிறகு, ஒத்துழைப்பு, பேச்சுவார்த்தைகள் பலனளிக்க ஆரம்பித்தன. சர்வதேச ஒத்துழைப்புக்கு மிகுந்த உழைப்பு தேவை. 20 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவை உலகம் முக்கியமாக கருதவில்லை. ஆனால் இன்று
சர்வதேச விவகாரங்களில் இந்திதா ஏதாவது கூறினால் அது கவனத்தை பெறுகிறது.
ஐக்கிய நாடுகளை விட ஜி 20 பலம் மிக்க அமைப்பாகும். அந்த அமைப்பில் உலகுக்கு
வழிகாட்ட இந்தியாவுக்கு வாய்ப்பு உள்ளது என கூறினார்.

மேலும், நாங்கள் இந்தியர்கள் அல்ல, தனி நாடு வேண்டும் என கேட்ட நாகா மக்களுடன்
தொடர்ந்து பேசினேன், 2 ஆயிரம் கிராம தலைவர்கள் உடன் பேச்சுவார்த்தை
நடத்தினேன். எந்தவித காவலும் இல்லாமல் அவர்கள் வீடுகளில் தங்கி உறங்கி
தொடர்ந்து பேசினேன். அவர்கள் தங்கள் கோரிக்கையை கைவிட்டனர். பசுமை ஆற்றல் (Green Energy) நோக்கி நாம் நகர வேண்டும். கார்பன் வெளியேற்றாத
ஆற்றலை நோக்கி நகர வேண்டும். பசுமை ஆற்றலை முதன்மை எரிபொருள்/எனர்ஜி ஆக கருதவில்லை என்றால் உலகம் பெரும் பேரிடரை சந்திக்கும் என பேசினார்.


அத்துடன், பொதுவாக பெண்களை வலுவற்றவர்கள் என கருதுகின்றனர். அந்த நிலை தற்போது மாறி வருகிறது. ஒற்றை இலக்கை நோக்கி திடமான மன உறுதியுடன் பயணியுங்கள், அதற்கான நேரத்தை கூடுமான அளவில் ஒதுக்குங்கள். குறைந்தது 13-14 மணி நேரத்தை அதற்காக ஒதுக்குங்கள். ஒவ்வொரு பாடத்திற்கும் அதற்கான நேரத்தை ஒதுக்குங்கள், அதிக கவனம் செலுத்த வேண்டியதாக உணரும் பாடத்திற்கு கூடுதல் நேரத்தினை ஒதுக்குங்கள் என கூரினார்.

மேலும், படிப்பது மட்டும் போதாது, படிப்பதை எழுதுங்கள். கற்றதை எப்படி செயல்படுத்துவது என சிந்தியுங்கள் பொழுது போக்கிற்கு, உங்களது கவனத்தை திசை திருப்புபவைக்கு முக்கியத்துவம் அளிக்காதீர்கள். செய்ய்யவேண்டியதை அந்த நேரத்தில் செய்யுங்கள், தட்டிகளிக்காதீர்கள். உங்களது மன உறுதி உங்களிடம் தான் உள்ளது புற உலகில் இல்லை. படிப்பதுடன் சிறிது உடற்பயிற்சி செய்யுங்கள். அதிக அளவிலான உடற்பயிற்சியும் உங்களை சோர்வடைய செய்யும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள் என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.