பெண்ணுடன் இருக்கும் மார்பிங் புகைப்படத்தை வைரலாக்கி அவப்பெயரை ஏற்படுத்த திட்டமிட்டதால், உத்தரபிரதேச மடாதிபதிஉயிரை மாய்த்துக் கொண்ட தகவல் இப்போது தெரிய வந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், அலகாபாத்தில் பாகம்பரி என்ற மடம் உள்ளது. இதன் மடாபதி மஹந்த் நரேந்திர கிரி. இவர், இந்தியாவில் சாதுக்களின் மிகப்பெரிய அமைப்பான அகில பாரதிய அகாடா பரிஷத் தலைவராக இருந்து வந்ததார். இந்நிலையில், நேற்று முன்தினம் மடாதிபதி மஹந்த் கிரி தூக்கில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந் தார். அவர் சடலத்தை மீட்ட போலீசார், அங்கிருந்த உயிரிழப்பு கடிதத்தை கைப்பற்றினர்.
அதில், தனது சீடர் ஆனந்த் கிரி உட்பட 3 பேரால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக, உயிரை மாய்த்துக் கொள்வதாக எழுதப்பட்டிருந்தது. ஆனாலும், கடிதத்தின் உண்மைத் தன்மை குறித்து போலீசார் விசாரித்து வந்தனர். பின்னர் அந்த கடிதத்தில் இருந்த தக வலை வெளியிட்டனர். அதில், ‘என் உயிரிழப்புக்கு சீடர்கள் ஆனந்த் கிரி, அத்யா பிரசாத் திவாரி, சந்தீப் திவாரி ஆகியோர்தான் காரணம்.
எனது போட்டோவை, ஒரு பெண்ணுடன் இருப்பது போல மார்பிங் செய்து அதை சமூக வலைதளத்தில் வைரலாக்க, ஆனந்த் கிரி திட்டமிட்டிருப்பதாக எனக்கு தகவல் வந்தது. நான் மரியாதையுடன் வாழ்ந்தவன். அது கெட்டு, அவப்பெயருடன் வாழ விரும்பாததால் கடந்த 13-ஆம் தேதியில் இருந்தே உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்தேன். தைரியம் வர வில்லை’ என நரேந்திர கிரி கூறி உள்ளார். இதையடுத்து ஆனந்த் கிரி உட்பட 3 சீடர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மடத்திற்கு மறைந்த மடாதிபதிக்கு அஞ்சலி செலுத்தினார். இந்த விஷயத்தில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப் படும் என அவர் உறுதி அளித்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக 18 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை உபி போலீசார் அமைத்துள்ளனர்.










