முக்கியச் செய்திகள் இந்தியா

“தொகுதிகளை சமமாக பங்கிடுவது குறித்து பேசவில்லை” – நாராயணசாமி

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில், திமுகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருவதாக, நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகம், பாண்டிச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இதில், தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் தேர்தலை சந்திக்கிறது. அதேபோல் புதுச்சேரியிலும் திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்நிலையில், திமுகவுடனான கூட்டணி குறித்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சி நிர்வாகிகளை சந்தித்து, காங்கிரசை சேர்ந்த புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்று ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மொத்தமுள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ்- திமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது, என பேச்சுவார்த்தை நடைபெற்றது. திமுக கூறிய கருத்துகளை கட்சி தலைமையிடம் தெரிவிக்கவிருப்பதாகவும், தொகுதிகளை சமமாக பங்கிடுவது குறித்து, பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும், அவர் விளக்கம் அளித்தார்.

Advertisement:

Related posts

நடிகர் விவேக்கின் உடல் அவர் இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது!

Gayathri Venkatesan

பல முனை போட்டி அதிமுகவுக்கு சாதகம்தான் – அமைச்சர் விஜயபாஸ்கர்

Gayathri Venkatesan

மே 11 முதல் ஸ்டெர்லைட் ஆக்சிஜன் கிடைக்கும்: அமைச்சர் தங்கம் தென்னரசு

Karthick