முக்கியச் செய்திகள் தமிழகம்

தேமுதிக சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டி!

சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட போவதாக தேமுதிக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இதில், அதிமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து தேமுதிக பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இருப்பினும் தேமுதிக கேட்ட தொகுதிகளை அதிமுக தர மறுத்ததால் தேமுதிக கூட்டணியில் இருந்து விலகியது. இந்நிலையில், கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின், மகன் விஜய பிரபாகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், கட்சியின் தலைவரான விஜயகாந்த் உத்தரவிட்டால், எந்த தொகுதியில் வேண்டுமாலும் போட்டியிடுவேன். அதிமுக கூட்டணியில் இருந்து விலகியுள்ள நிலையில், 234 தொகுதிகளிலும் தேமுதிக தனித்து போட்டியிட வேண்டும் என்பதே, 99 சதவீத தொண்டர்களின் விருப்பம் என அவர் தெரிவித்தார். கூட்டணி குறித்து பேச, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட, மற்ற கட்சிகள்தான் தேமுதிகவிடம் வரவேண்டும் எனவும், தேமுதிக யாரிடமும் கூட்டணிக்காக செல்லாது, எனவும் விஜய பிரபாகரன் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், தேமுதிக வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் என கட்சி தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Advertisement:

Related posts

அழகர் அணைத் திட்டம் செயல்படுத்தப்படும்: டிடிவி தினகரன்

ஆர்டிஐ மனுக்கள் நிராகரிப்பது குறைக்கப்பட்டுள்ளது!

எல்.ரேணுகாதேவி

வாக்குக்கு பணம் கொடுக்க வந்தால் ரூ.10,000 கேளுங்கள்: சீமான்

Karthick