முக்கியச் செய்திகள் தமிழகம்

திமுக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும்?

சட்டப்பேரவைத் தேர்தலில், கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு ஒதுக்கியது போக, 174 தொகுதிகளில் திமுக போட்டியிடவுள்ளது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இதில், அதிமுக பாமகவுக்கு 23 தொகுதிகளையும், பாஜகவுக்கு 20 தொகுதிகளையும் ஒதுக்கியுள்ளது. அதேபோல் திமுக கூட்டணியில் இதுவரை காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளும், மதிமுக., விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இது தவிர, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3 தொகுதிகளும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஆதி தமிழர் பேரவை மற்றும் மக்கள் விடுதலை கட்சி ஆகியவற்றுக்கு தலா 1 தொகுதி என கூட்டணிக் கட்சிகளுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால், திமுக 174 இடங்களில் நேரடியாக போட்டியிடவுள்ளது. இந்நிலையில், திமுக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:

Related posts

விவேக்கின் இறுதிச் சடங்கிற்கு காவல்துறை மரியாதை!

Gayathri Venkatesan

அமமுக கூட்டணியில் தேமுதிக 60 இடங்களில் போட்டி

Jeba

கொலை நகரமாகும் அரக்கோணம்: அச்சத்தில் பொதுமக்கள்!

Vandhana