சாய்பாபா ஆலயத்தில் அன்னதானகூடம் திறப்பு- திரளான பக்தர்கள் பங்கேற்பு

நாமக்கல் அருகே அமைந்துள்ள ஸ்ரீ சாய்நாதா ஆலயத்தில் ஐந்தாமாண்டு அபிஷேகம் மற்றும் அன்னதான கூடம் திறப்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து பாபாவை தரிசித்து சென்றனர். மனித புனிதராக…

நாமக்கல் அருகே அமைந்துள்ள ஸ்ரீ சாய்நாதா ஆலயத்தில் ஐந்தாமாண்டு அபிஷேகம் மற்றும் அன்னதான கூடம் திறப்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து பாபாவை தரிசித்து சென்றனர்.

மனித புனிதராக பிறந்து பல அற்புதங்கள் நிகழ்த்திய சாய்பாபாவை சமய வேறுபாடுகள் இன்றி அனைத்து மதத்தினரும் வணங்கி வருகின்றனர். நாமக்கல் மாநகர எல்லைக்குள் திருச்சி சாலையில் ஸ்ரீ சாய் சத்தா பிருந்தாவனம் அமைந்துள்ளது. இப்பிருந்தாவனத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீராக வேந்திரர், ஸ்ரீ தத்தாரேயர் ஆகியோரின் புதிய திருவுருவ சிலைகள் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நேற்று காலை வெகு விமர்சையாக நடைபெற்றது.

அதனைதொடர்ந்து ஸ்ரீ சத்தியநாராயண பூஜை அரங்கம் மற்றும் மகா அன்னதான கூடம் உள்ளிட்டவை திறக்கப்பட்டன. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் பங்கேற்பதெற்கென நாமக்கல், ஈரோடு,கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.