வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்தும் ஜெய்பீம் திரைப்படத்திற்கு மத்திய, மாநில அரசுகள் எவ்வித விருதும், அங்கீகாரமும் வழங்கக்கூடாது என வன்னியர் சங்கம் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.
சமீபத்தில் சூர்யா நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில் வெளியான ‘ஜெய்பீம்‘ திரைப்படம், பொது வெளியின் பல்வேறு உரையாடல்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. படத்திற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பலர் பொது தளங்களில் பேசி வருகின்றனர்.
இந்நிலையில் வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்தும் ஜெய்பீம் திரைப்படத்திற்கு மத்திய, மாநில அரசுகள் எவ்வித விருதும், அங்கீகாரமும் வழங்கக்கூடாது என வன்னியர் சங்கம் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.
மத்திய ஒளிபரப்புத்துறை மற்றும் மக்கள் தொடர்புத்துறை செயலாளர்களுக்கு வன்னியர் சங்கம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. வன்னியர் சங்கத்தின் மாநில தலைவர் அருள்மொழியின் வழிக்காட்டுதல்படி இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
https://twitter.com/PMKAdvocateBalu/status/1461281905911877635
முன்னதாக நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தாலோ, தாக்கினாலோ ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.







