சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள கமலாலயத்தில் புதிய தமிழக பாஜக தலைவர் தேர்தலுக்கு விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், நயினார் நாகேந்திரன் மட்டுமே தற்போது வரை விருப்பமனு தாக்கல் செய்துள்ளார்.
புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வழியாக பல்வேறு மூத்த தலைவர்கள் கொண்ட பாஜக மையக் குழு கூட்டத்தில் அடுத்த தலைவர் யார் என்ற ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் எல். முருகன், வானதி சீனிவாசன், அண்ணாமலை உட்பட்ட பல்வேறு நபர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் பொறுப்பிலிருந்து அண்ணாமலை தானாக வெளியேற உள்ளதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன. இதன் காரணமாக நயினார் நாகேந்திரன் மாநில தலைவர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட அதிக அளவில் சாத்தியக் கூறுகள் உள்ளதாகவும் பல்வேறு தரப்புகள் தகவல்கள் வழங்கி வருகின்றனர்.







