நாடு முழுவது நாளை நீட் மறுதேர்வு நடைபெற உள்ளது. இதற்கான ஹால்டிக்கெட்டை தேசிய தேர்வு முகமை சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. அப்போது ஹால் டிக்கெட் பதிவிரக்கத்தில் பல்வேறு குளறுபடி ஏற்பட்ட நிலையில் பின்னர் அது சரி செய்யப்பட்டது.
இந்நிலையில் நாக்பூரை சேர்ந்த மாணவர் ஒருவருக்கு அபுதாபியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மகாரஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த அப்துல்லா என்ற மாணவர் நாளை நடைபெற உள்ள நீட் மறு தேர்வு எழுதுவதற்காக ஹால் டிக்கெட்டை பதிவிரக்கம் செய்துள்ளார். அதில் அவருக்கு அபுதாபியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து அப்துல்லா தனது ஹால் டிக்கெட்டை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இது மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டதை தேசிய தேர்வு முகமை ஏற்றுக்கொண்டுள்ளது. மேலும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தேர்வு மையம் மாரியதாகவும், சம்மந்தப்பட்ட மாணவர் அப்துல்லாவுக்கு இன்று மாலைக்குள் புதிய ஹால் டிக்கெட் வழங்கப்படும் என்றும் விளக்கமளித்துள்ளது.




