முக்கியச் செய்திகள் தமிழகம்

பள்ளிகளை திறப்பது குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை

தமிழ்நாட்டில் பள்ளிகளை திறப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற் கொள்கிறார்.

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய கொரோனா ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது. கடந்த சில மாதங்களாக அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு இப்போது சற்று குறைந்து வருகிறது. இதன் காரணமாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடன்கு, வரும் 6ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதே நேரம் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

நாளை மறுநாள் முதல் 9, 10, 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஆலோசனை மேற்கொள்கிறார்.

Advertisement:
SHARE

Related posts

ஜனநாயகக் கடமையாற்றிய நடிகர் ரஜினி!

Halley karthi

தடுப்பூசி விவகாரம்; கடந்த கால ஆட்சியாளர்களே காரணம் – மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு

Saravana Kumar

கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்ட 50 கிலோ கஞ்சா பறிமுதல்!

Saravana