இயக்குநர் அமீர் நடித்துள்ள நாற்காலி திரைப்படத்தில் எம்.ஜி.ஆரின் பெருமைகளை பற்றிய ஒரு பாடலை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில், எம்.ஜி.ஆரின் புகழை பாடும் பாடலின் வெளியீட்டு விழா, சென்னை கீரின்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இந்த பாடலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட அமைச்சர் கடம்பூர் ராஜூ பெற்றுக் கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் அமீர், நாற்காலி திரைப்படம் யாருடைய மனதையும் காயப்படுத்தாது என்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நாற்காலி படமானது அமைதிப்படை படம் போல அரசியல் நய்யாண்டியுடன் கூடிய படம் என தெரிவித்தார். இந்தப் படத்தில் தான் எம்.ஜி.ஆரின் ரசிகனாக நடித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அமீர், எம்.ஜி.ஆரின் பெருமைகள் தொடர்பான படம் என்பதால் முதல்வர் இந்த பாடலை வெளியிட வேண்டுமென்று தயாரிப்பாளர் நினைத்தாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், எம்.ஜி.ஆர் யாருக்கு சொந்தம் என்ற சர்ச்சை இருக்கும் நிலையில் எம்.ஜி.ஆர் என்பவர் அனைவருக்கும் சொந்தம் என்ற அடிப்படையில் தான் பயன்படுத்தி உள்ளதாக கூறினார்.
சட்டமன்ற தேர்தலுக்காக இந்தப் படம் எடுக்கப்படவில்லை எனவும், அமைதிப்படைக்கு பிறகு அரசியல் நய்யாண்டியுடன் கூடிய திரைப்படம் வரவில்லை எனவும் குறிப்பிட்டார்.