இன்ஜினியர்கள் சிலர் இணைந்து சைக்கிள் மிக்ஸியை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.
பெங்களுரூவில் உள்ள ஜூஸ் கடை ஒன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஏனென்றால் இங்கு உங்களுக்கு ஜூஸ் மட்டுமல்லாமல் வித்தியாசமான ஒரு அனுபவமும் கிடைக்கப் போகிறது. பழைய சைக்கிள் மற்றும் பழைய மிக்ஸியை இதற்காக பயன்படுத்தியுள்ளனர். சைக்கிளை மிதித்து ஜூஸ் தயாரிக்கப்படுகிறது. இதற்கு மின்சாரம் தேவையில்லை.
வாடிக்கையாளர்களே இந்த சைக்கிளை மிதித்து ஜூஸ் ரெடி செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். இது அவர்களது உடல்நலத்திற்கும் நல்லது. மேலும் இந்த கடையில் வீணாக எந்த பொருட்களையும் கீழே கொட்டுவதில்லை. அதனை பயனுள்ள வகையில் வேறு வழியில் பயன்படுத்திக் கொள்வது கூடுதல் சிறப்பம்சம்.
கொரோனா காலத்தில் வீட்டிலேயே முடங்கி இருந்த போது, இன்ஜியர்கள் சிலர் இணைந்து சிந்தித்து இதனை வடிவமைத்துள்ளனர். இந்த முயற்சிக்கு அப்பகுதி மக்கள் நல்ல வரவேற்பு அளித்துள்ளனர்.







