நாம் தமிழர் ஆட்சி அமைந்தால்…சீமான்

நாம் தமிழர் ஆட்சி அமைத்தால் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் விட மாட்டோம் என சீமான் குறிப்பிட்டுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஸ்டுடியோவில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பான…

நாம் தமிழர் ஆட்சி அமைத்தால் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் விட மாட்டோம் என சீமான் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஸ்டுடியோவில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பான “முத்துநகர் படுகொலை” ஆவணப்படத்தை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பார்த்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான், “தூத்துக்குடி துப்பாக்கி சூடு மூலமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களை பார்க்கும் போது கஷ்டமாக உள்ளது. கைக்குழந்தை உடன் வந்து யாராவது கலவரம் செய்ய வருவார்களா ? பேருந்தை கொளுத்தியது, கலவரத்தை ஏற்படுத்தியது காவல்துறை தான்” என்று குற்றம்சாட்டினார். நாம் தமிழர் ஆட்சி அமைத்தால் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் விட மாட்டோம் என்றும் குறிப்பிட்ட சீமான், சுடுவதற்கு யார் அனுமதி கொடுத்தது என்று கேட்டு நடவடிக்கை எடுப்போம் என்றும் கூறினார்.

பேரறிவாளன் நிரபராதி என்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் மோடி மற்றும் அமித்ஷா மூலம் நடைபெற்ற குஜராத் கலவரத்தில் மோடியை நிரபராதி என்று ஏற்றுக்கொள்ள முடியுமா என கேள்வி எழுப்பிய சீமான், “மீதமுள்ள 6 பேரை விடுதலை செய்ய முடியாது என்று சொல்ல மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை. இதை உச்சநீதிமன்றம் தான் கூற வேண்டும்.பேரறிவாளனை விடுதலை செய்ய பயன்படுத்திய சட்டப்பிரிவை மீதமுள்ள 6 பேரை விடுதலை செய்ய பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.