28.6 C
Chennai
April 25, 2024
முக்கியச் செய்திகள் உலகம்

சீன தாக்குதலில் இருந்து தைவானை பாதுகாப்போம்: ஜோ பைடன்

சீன தாக்குதலில் இருந்து தைவானை அமெரிக்கா பாதுகாக்கும் என்ற அந்நாட்டின் அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

க்வாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்றுள்ள ஜோ பைடன், தலைநகர் டோக்கியோவில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தைவானை சீனா தாக்குமானால் அந்த நாட்டை அமெரிக்கா பாதுகாக்குமா என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு ஜோ பைடன், ஆம் என பதில் அளித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தைவானை பாதுகாப்போம் என்ற உறுதியை அமெரிக்கா அளித்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். ராணுவத்தின் மூலம் தைவானை சீனா ஆக்கிரமிக்க முயலுமானால் அது நடக்காது என குறிப்பிட்ட ஜோ பைடன், அத்தகைய முயற்சியை மேற்கொள்வது சீனாவுக்கு ஏற்றதாக இருக்காது என்றார். அதோடு, சீனா அவ்வாறு முயலாது; முயலக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த ஜோ பைடன், ஆசியாவில் ஜப்பான் வலிமையான நாடாக இருக்க வேண்டியது அவசியம் என்றார். வலிமையான ஜப்பான், வலிமையான ஜப்பான் – அமெரிக்க உறவு ஆகிய இரண்டும், ஆசியாவின் நலனுக்கு மிகவும் அவசியம் என அவர் குறிப்பிட்டார்.

ஐநா பாதுகாப்பு அவையில் ஜப்பான் நிரந்தர உறுப்பு நாடாக திகழ அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என்றும் ஜோ பைடன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading