கோவை வடவள்ளியில் 5 தெருநாய்களை விஷம் வைத்து கொலை செய்த நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கோவை நாகராஜபுரம் – பேரூர் சாலையில் சுற்றித் திரியும் தெரு நாய்கள்
அப்பகுதிக்கு பாதுகாப்பாக இருந்து வருகிறது. இந்த நிலையில் மர்ம நபர்கள்
சிலர் உணவில் விஷம் கலந்து நாய்களுக்கு வைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதனை உண்ட 5 தெரு நாய்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து, கோவை வேடப்பட்டியைச் சேர்ந்த விலங்கு நல ஆர்வலர் பாபுராஜ் (47) என்பவர் வடவள்ளி போலீஸில் புகார் அளித்தார். புகார் தொடர்பாக வடவள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதியில் திருடுவதற்காக நோட்டமிட்ட நபர்கள் யாரேனும் நாய்களுக்கு விஷம் வைத்தனரா? அல்லது வேறு காரணமா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
-ம.பவித்ரா