சங்கரன்கோவிலில் தனியார் தட்டச்சு பயிற்சி மையத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள், அங்குள்ள பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஸ்கிரிப்ட் ஹவுஸ் என்ற தட்டச்சு பயிற்சி நிறுவனம் இயங்கி வந்துள்ளது. இதனை ராம சுப்பிரமணியன் நடத்தி வந்துள்ளார். அந்த நிறுவனத்தில் சுப்ரியா என்ற மாணவி டைப்ரேட்டிங் பயிற்சி பயின்று வந்துள்ளார். திடீரென்று ஒரு நாள் சுப்ரியா வீட்டிற்கு வராததால் பதறி போன தந்தை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். மேலும் நிறுவனம் நடத்தி வரும் ராம சுப்பிரமணியன் மீது சந்தேகம் இருப்பதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார்.
இந்நிலையில் காலை 9:30 மணியளவில் ராம சுப்பரமணியன் பயிற்சி மையத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் டைப்ரேட்டிங் பொருட்கள், மேஜை நாற்காலிகள், உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி சேதபடுத்தியுள்ளனர் .மேலும் அங்கு சிசிடிவி காட்சிகள் பதிவாகி இருந்த ஹாட்டிஸ்க்கையும் எடுத்து சென்றுள்ளனர். இதனால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தது. இச்சம்பவம் அறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







