சென்னை மயிலாப்பூரில் வியாபாரியை வெட்டி விட்டு தப்பிய ஓடிய மர்ம கும்பல்

சென்னை மயிலாப்பூரில் காய்கறி வாங்குவது போல நடித்து, வியாபாரியை வெட்டி விட்டு தப்பிய ஓடிய கும்பல் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சென்னை மயிலாப்பூர் கன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவர், மயிலாப்பூரில்…

சென்னை மயிலாப்பூரில் காய்கறி வாங்குவது போல நடித்து, வியாபாரியை வெட்டி விட்டு தப்பிய ஓடிய கும்பல் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

சென்னை மயிலாப்பூர் கன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவர், மயிலாப்பூரில் உள்ள தெற்கு மாட வீதியில் உள்ள வெள்ளீஸ்வரர் கோயில் எதிரே நடைபாதையில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு ஆட்டோவில் வந்த அடையாளம் தெரியாத 3 பேர் காய்கறி வாங்குவதைப் போல நடித்து கையில் வைத்திருந்த கத்தியால் ஏழுமலையை வெட்டியுள்ளனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

காயமடைந்த ஏழுமலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மயிலாப்பூர் போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்ததில், ஏழுமலையை துரத்தி, துரத்தி வெட்டி விட்டு தப்பி ஓடும் காட்சிகள் பதிவாகிருந்தது.

அண்மைச் செய்தி: சென்னை சென்டரல் ரயில் நிலையத்தில், எம்ஜிஆர் சிலையை நிறுவ வேண்டும் – அதிமுக

முன்விரோதத்தில் அந்த கும்பல் வெட்டியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடந்தி வருகின்றனர். இந்நிலையில், ஏழுமலை வசித்து வரும் பகுதியைச் சேர்ந்த உஷா, ராணி, லட்சுமி என்பவர்களுக்கும் ஏழுமலைக்கும் மூன்று மாதங்களுக்கு முன் தகராறு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.