தொழில்துறைக்கு நான் வைத்துள்ள இலக்கு மிகப்பெரியது-முதலமைச்சர்

தொழில்துறைக்கு நான் வைத்துள்ள இலக்கு மிகப்பெரியது. 4ம் தலைமுறை தொழில் வளர்ச்சியை இலக்கு வைத்து அரசு செயல்பட்டு வருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் தமிழக விண்வெளி, பாதுகாப்பு தொழில் கொள்கை வெளியீட்டு…

தொழில்துறைக்கு நான் வைத்துள்ள இலக்கு மிகப்பெரியது. 4ம் தலைமுறை தொழில் வளர்ச்சியை இலக்கு வைத்து அரசு செயல்பட்டு வருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தமிழக விண்வெளி, பாதுகாப்பு தொழில் கொள்கை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி சிறப்பு மையம், தமிழ்நாடு ஸ்மார்ட் மற்றும் மேம்பட்ட உற்பத்தி மையம், மெய்நிகர் விமானி பயிற்சி நிறுவனத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, தமிழ்நாடு வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கை 2022 ஐ வெளியிட்டார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 15 மாத காலமாக தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் முன்னோக்கி செல்கிறது. தொழில்துறையானது வேகமான முன்னேற்றமடைந்து வருகிறது. உலக அளவிலான கவனத்தை தமிழ்நாடு பெற்றுள்ளது. 1 டிரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி தமிழகம் முன்னேறி வருகிறது. உயர்கல்வியிலும், தொழிற்திறனிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது.

தொழில்துறைக்கு நான் வைத்துள்ள இலக்கு மிகப்பெரியது. 4ம் தலைமுறை தொழில் வளர்ச்சியை இலக்கு வைத்து அரசு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டை முன்னேற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறோம். உற்பத்தித்துறை, சேவைத்துறை இரண்டிலும் முன்னிலையில் இருக்க வேண்டும்.

வான்வெளி, பாதுகாப்பு தொழில்துறையில் தமிழ்நாடு முன்னிலையில் இருந்து வருகிறது.
வரலாற்றைப் பார்த்தால் மிகப்பெரும் கடற்படையாக சோழர் படை இருந்தது. வான்வெளி & பாதுகாப்புத் துறையை வளர்ந்து வரும் துறையாக அறிவித்துள்ளது. 10 ஆண்டு காலக் கட்டத்திகுள் ரூ.75,000 கோடி முதலீட்டை நிர்ணயித்துள்ளோம்.

மெய்நிகர் விமானி பயிற்சி நிறுவனம் மூலம் மாதம் 200 மாணவர்கள் என்ற வீதத்தில் பயிற்சியளிக்கப்படும். கிராமப்புற படித்த இளைஞர்கள் ஆளில்லா விமான பைலட்டுகளாக உலகை வலம் வர இயலும் என்று முதலமைச்சர் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.