இளையராஜா இசையில் ‘டோரதி’ படத்தின் ‘முத்துமணி’ பாடல் வெளியீடு!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இளையராஜா இசையமைத்துள்ள டோரதி படத்தின் முத்துமணி என்ற பாடல் வெளியானது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் 10-வது திரைப்படம் ‘டோரதி’. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

கார்த்திக் சுப்பராஜின் தம்மம் ஃபிலிம்ஸ், ஜியோ ஸ்டுடியோஸ், சிக்யா என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து படத்தைத் தயாரித்துள்ளன. இப்படம் செப்டம்பர் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. முதல் முறையாக கார்த்திக் சுப்பராஜ் – இளையராஜா கூட்டணி இணைந்துள்ளதால், இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான ‘கல்யாண விருந்து’ பாடல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, இளையராஜாவின் துள்ளலான பாடல் இசை ரசிகர்கள் மற்றும் இளைஞர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

இந்த நிலையில், ‘டோரதி’ படத்தின் அடுத்த பாடலான ‘முத்துமணி’ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் பாடலும் ரசிகர்களைக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது..

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.