முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

18 வயது நிரம்பாத இஸ்லாம் சிறுமிக்கு திருமணம் செய்யத் தடையில்லை!

இஸ்லாம் சட்டப்படி பூப்படைந்த பிறகு 18 வயதிற்கு கீழ் உள்ள இஸ்லாமிய சிறுமி, தான் விரும்பும் யாரை வேண்டுமானும் திருமணம் செய்துக் கொள்ளலாம் என பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

பஞ்சாபில் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியும் 36 வயது ஆண் நபரும் கடந்த ஜனவரி 21ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணத்திற்கு குடும்பத்தினர் மணப்பெண்ணின் 17 வயதை காரணம் காட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்தப் பிரச்னையில் தெளிவுக் காண அந்த தம்பதியினர் பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் அவர்கள் திருமணம் குறித்து மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அல்கா சரின் அமர்வு தெரிவித்ததாவது, இஸ்லாம் மதச் சட்டம் 195 விதியின்படி, மனநலம் பாதிக்கப்பட்டோர் மற்றும் பூப்படையாத 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் பெற்றோர் அல்லது காப்பாளர் சம்மதத்தோடு திருமணம் செய்துக் கொள்ளலாம். பூப்படைந்து 18 வயது கீழ் உள்ளவர்களுக்கு திருமணத்தில் சம்மதம் இல்லை என்றால் அந்த திருமணம் ஏற்றுக்கொள்ளப்படாது என சட்டத்தில் இருப்பதை நீதிபதி சுட்டிக்காட்டினார்.

ஆகையால், இஸ்லாம் சட்டப்படி அவர்களின் திருமணம் செல்லும். எனவே இரு வீட்டு குடும்பத்தினருக்கு அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட உரிமை இல்லை. மேலும், அந்த தம்பதியினரின் பாதுகாப்பை உறுதி செய்ய தகுந்த பாதுகாப்பை வழங்க காவல்துறையினருக்கு நீதிபதி வலியுறுத்தி உத்தரவிட்டுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

மன்சூர் அலிகான் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

Ezhilarasan

சிபிஎம் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Halley karthi

முதல்வர் பழனிசாமி தலைமையில் நாளை தமிழக அமைச்சரவை கூடுகிறது!

Jayapriya

Leave a Reply