முக்கியச் செய்திகள் தமிழகம்

பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு: டிஎன்பிஎஸ்சி 

பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 4 தேர்வுகளை எப்போது நடத்தலாம் என்பது குறித்து டிஎன்பிஎஸ்சி  தலைவர் பாலச்சந்திரன், செயலாளர் உமா மகேஸ்வரி ஆகியோர் நேற்று ஆலோசனை நடத்தினர். இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்கான திருத்தப்பட்ட அறிவுரைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதாவது, விண்ணப்பிக்கும் முறை, பொதுத் தகுதிக்கான நிபந்தனைகள், வயது வரம்பு சலுகைகள், இட ஒதுக்கீடு, பாடத்திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு அறிவுரைகள் உள்ளிட்டவற்றை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. One time registration எனப்படும் ஒருமுறை பதிவு 5 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்றும், புகைப்படம், கையொப்பம் தெளிவாக இல்லையென்றால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் பெண்களுக்கு 40 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என சட்டமன்றத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisement:
SHARE

Related posts

விண்ணிற்கு செல்லவிருக்கும் பிரதமர் மோடியின் புகைப்படம்!

Jeba Arul Robinson

பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதிக்க பாஜக அரசு தயாரக இல்லை; கனிமொழி எம்பி விமர்சனம்

Saravana Kumar

வெளிநாட்டு கார் என்பதற்காக வானத்திலா பறக்க முடியும்? தனுஷுக்கு நீதிபதி சரமாரி கேள்வி

Gayathri Venkatesan