உத்தரகாண்டின் ஜோஷிமத் நகரமே வசிக்க பாதுகாப்பற்றது என்பதை குறிக்கும் வகையில் அங்குள்ள கட்டடங்களில் அதிகாரிகள் சிவப்பு நிற பெருக்கல் குறியை வரைந்துள்ளனர்.
உத்தரகண்டில் உள்ள ஜோஷிமத் நகரத்தின் பகுதிகள் புதைந்து வருவதால், வீடுகள், கட்டடங்கள் மற்றும் சாலைகளில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. அங்கு மேலும் பல வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் பாதிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 678ஆக உயர்ந்துள்ளது. அங்கிருந்து இதுவரை 82 குடும்பங்கள் நகரின் பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நிலச்சரிவு உள்ளிட்ட காரணங்களால் 570க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டதையடுத்து, அங்கு வசிப்போர் வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.வாழ்வதற்கு பாதுகாப்பாற்ற 200க்கம் மேற்பட்ட வீடுகளில் மாவட்ட நிர்வாகம் சிவப்பு குறியிட்டுள்ளது. அந்த வீடுகளில் வசிப்பவர்களை தற்காலிக நிவாரண முகாம்கள் அல்லது வாடகைக்கு வேறு இடங்களில் தங்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்காக 16 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர பொதுமக்களை தங்க வைக்க கூடுதலாக 19 ஹோட்டல்கள், விருந்தினர் இல்லங்கள், பள்ளிக்கூடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. நகருக்கு வெளியே பீபல்கோடி பகுதியிலும் பொதுமக்களை தங்க வைப்பதற்கான இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.