முக்கியச் செய்திகள் தமிழகம்

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 135 அடியாக உயர்வு

கேரளா மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 135 அடியை தாண்டியுள்ளது.

தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை ஆகிய ஐந்து மாவட்டங்களில் வாழ்வாதாரமாக முல்லைப் பெரியாறு அணை திழந்து வருகிறது. அணையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சற்று தாமதமாக பெய்தாலும் தற்போது கேரளா மற்றும் தேனி மாவட்டத்தை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பகலில் சாரல் மழையாகவும் இரவில் கன மழையாகவும் பெய்து வருவதையடுத்து முல்லைப் பெரியாறு அணை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக 130 அடியாக இருந்த நிலையில் தற்போது இரண்டு தினங்களில் 5 அடி உயர்ந்து 135 .25 அடியாக அதிகரித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணை

அணைக்கு நீர்வரத்து 1,315 கன அடியிலிருந்து தற்போது 4,875 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் கொள்ளளவு 5,929 மில்லியன் கன அடியாகவும் அணையில் இருந்து குடிநீர் மற்றும் விவசாய தேவைக்காக 900 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால் லோயர் கேம்பில் அமைக்கப்பட்டுள்ள மின் உற்பத்தி நிலையத்தில் தற்போது 81 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் இன்று காலை 10.4 மீட்டர் மழையும் தேக்கடியில் 10 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. தொடர்ந்து அணை நீர்மட்டம் அதிகரித்து வருவதை அடுத்து அணை விரைவில் 142 அடியை எட்டும் என்ற எதிர்பார்ப்பில் தேனி மாவட்ட விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சிங்கப்பூர் சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; இன்று நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்பு!

Web Editor

திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படும் திரிக்கு சிறப்பு பூஜை

G SaravanaKumar

கொரோனாவுக்கு எதிராக புதிய மருந்து கண்டுபிடிப்பு!

EZHILARASAN D