முதுமலையில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமை பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பார்வையிடவுள்ளார். இந்நிலையில் அவரை வரவேற்க யானைகளுக்கு சிறப்பு அளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் முதுமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமிற்கு வருகை தர உள்ளார்.அங்கு வருகை தரும் பிரதமர் மோடி சமீபத்தில் ஆஸ்கார் விருது வென்ற தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் நடித்த பழங்குடியின யானை பாகன் தம்பதிகளான பொம்மன் -பெள்ளி ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் யானைகள் வளர்ப்பு முகாம்களில் எவ்வாறு யானைகள் பராமரிக்கபடுகின்றன என்பதையும் பிரதமர் பார்வையிடுவார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே 9ம் தேதி வருகை தரும் பிரதமரை வரவேற்க யானைகளுக்கு பல்வேறு விதமான சிறப்பு பயிற்சிகளை பாகன்கள் அளித்து வருகின்றனர்.
—வேந்தன்







