பட்டாசு ஆலையில் விபத்து – 2 அறைகள் தரைமட்டம்!

கோவில்பட்டி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 2 அறைகள் தரைமட்டமாகின. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் கோவில்பட்டி அருகே முக்கூட்டுமலை கிராமத்தில் ஜெயா பயர் ஓர்க்ஸ் என்ற…

கோவில்பட்டி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 2 அறைகள் தரைமட்டமாகின.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் கோவில்பட்டி அருகே முக்கூட்டுமலை கிராமத்தில் ஜெயா பயர் ஓர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறாா். இந்நிலையில் புதன் கிழமை வழக்கம் போல் பணிகள் முடிந்ததும் தொழிலாளர்கள் வீட்டிற்கு சென்று விட்டனர். இதையடுத்து  இரவில் திடீரென பட்டாசு ஆலையிலிருந்து பயங்கர சத்ததுடன் பட்டாசுகள் வெடித்து சிதறியதில் தயார் செய்து வைக்கப்பட்டு இருந்த  பட்டாசுகளின்   2 அறைகளும் தரைமட்டமானது.

தொடர்ந்து பட்டாசுகள் பலத்த சத்தததுடன் வெடித்து கொண்டு இருந்தன. இதனை பார்த்து அருகில் இருந்த  மக்கள் கழுகுமலை காவல் நிலையத்திற்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்த நிலையில்   விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள்  தீயை  அணைத்தனர்.

மேலும் இரவு நேரம் என்பதாலும், தொழிலாளர்கள் யாரும் இல்லை என்பதாலும்  உயிர் சேதம் எதுவும் இல்லமால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.  பின்னா் விபத்து குறித்து கழுகுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.