ராஞ்சியில் உள்ள தனது பண்ணை நிலத்தில் டிராக்டரை ஓட்டி விவசாயியாக மாறிய எம்.எஸ்.தோனியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து ஓய்வு பெற்ற எம்.எஸ்.தோனி தற்போது ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மட்டும் விளையாடி வருகிறார். பொதுவாக சமூக வலைதளங்களில் இருந்து விலகியே இருக்கும் தோனி எப்போதாவது வீடியோக்கள் அல்லது புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய வீடியோ ஒன்றை எம்.எஸ்.தோனி வெளியிட்டுள்ளார்.
கடைசியாக 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் வீடியோ வெளியிட்டிருந்த நிலையில் தற்போது புதிய வீடியோவை தோனி வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் டிராக்டரை தோனி ஓட்டி நிலத்தை உழுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதில் மகிழ்ச்சிதான் என்றாலும் இந்த வேலையை முடிப்பதற்கு நீண்டநேரம் ஆகிறது என்று இந்த வீடியோவுக்கு அவர் கேப்ஷன் கொடுத்துள்ளார். தற்போது இந்த வீடியோ அதிக லைக்ஸ்களை குவித்து வருகிறது. சுமார் 35 லட்சம் பேர் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர்.







