முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

ChatGPT உதவியால் பல்கலைக்கழக தேர்வை வென்ற மாணவர்

சாட்ஜிபிடி (ChatGPT) என்ற செயற்கை நுண்ணறிவு சாப்ட்வேர் உதவியுடன் மாணவர் ஒருவர் பல்கலைக்கழக தேர்வை எழுதி வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஓப்பன்ஏஐ (OpenAI) எனும் நிறுவனத்தால் சாட்ஜிபிடி (ChatGPT) எனப்படும் செயற்கை நுண்ணறிவு செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. பயனர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் இது  வடிவமைக்கப்பட்டிருந்தது.  அறிமுகமான இரண்டே மாதங்களில் 10 கோடி பயனர்களை  சாட்ஜிபிடி பெற்றுள்ளது.  சாட்ஜிபிடியை வைத்து பல்வேறு முயற்சிகளில் பயனர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அந்த வகையில், பீட்டர் ஸ்னெப்வாங்கர்ஸ் என்ற கல்லூரி இறுதியாண்டு மாணவர் ’சமூகவியல் கொள்கை’ குறித்த தேர்வை சாட்ஜிபிடியை பயன்படுத்தி எழுதலாம் என்று திட்டமிட்டுள்ளார். அதன்படி, சமூகவியல் கொள்கை குறித்து 2,000 வார்த்தைகள் உள்ள ஒரு கட்டுரையை எழுத சாட்ஜிபிடியிடம் கமண்ட் கொடுத்துள்ளார். 20 நிமிடங்களில் சாட்ஜிபிடி அந்த கட்டுரையை எழுதி முடித்துவிட்டது. பிறகு அந்த கட்டுரையை தனது ஆசிரியரிடம் பீட்டர் சமர்பித்துள்ளார். அந்த கட்டுரையை திருத்திய ஆசிரியர் 53 மதிப்பெண்கள் வழங்கியுள்ளார். ஆனால் இந்த கட்டுரை மிக ஆழமாக இல்லை என அந்த ஆசிரியர் கூறியுள்ளார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை சோதனை செய்யவே இப்படி செய்ததாக பீட்டர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே சாட்ஜிபிடி அமெரிக்காவின் மருத்துவ தேர்வுகளை வென்றிருந்தது. அதுமட்டுமல்லாமல் வார்ட்டன் பிஸினஸ் ஸ்கூலின் இறுதி ஆண்டு எம்பிஏ படிப்புக்கு உள்ள தேர்வையும்  சாட்ஜிபிடி வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram