குடியரசு தலைவர் தேர்தல் முடிவடைந்த நிலையில் வாக்குப்பெட்டிகள் அனைத்தும் பாதுகாப்பான முறையில் மிஸ்டர் வாக்குபெட்டி டிக்கெட்டில் விமானம் மூலம் டெல்லிக்கு எடுத்து செல்லப்பட்டது.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் பதவி காலம் முடிவடையயுள்ளதையொட்டி நேற்று குடியரசு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தேசிய கூட்டணி கட்சியின் சார்பாக திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பாக யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 99.18 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகளை 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பியிருந்தது. பயணத்திற்கான ‘மிஸ்டர் வாக்குப் பெட்டி’ என்ற பெயரில் தனித்தனியான ‘இரு வழி’ விமான டிக்கெட்டுகளுடன் வாக்குப் பெட்டிகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தன.
“Mr Ballot Box” 😄
Separate air tickets purchased by @ECISVEEP for ballot boxes as they travelled to various states and back now to Delhi, carrying the votes cast in the #PresidentialElections2022!
See below sample air ticket pic.twitter.com/DdYHoE9VNg
— Poulomi Saha (@PoulomiMSaha) July 18, 2022
இந்நிலையில் குடியரசு தலைவர் நேற்று முடிந்த நிலையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள வாக்குப்பெட்டிகள் அனைத்தும் டெல்லி கொண்டு செல்லப்பட்டன. இதற்காக தேர்தல் அதிகாரிகள் ‘மிஸ்டர் வாக்கு பெட்டி’ என்ற பெயரில் தனி விமான டிக்கெட்டுகளில் வாக்குப்பெட்டிகளை தனி இருக்கைகளில் வைத்து எடுத்து பாதுகாப்பாக எடுத்து சென்றனர்.