இந்தியா குற்றம்

கணவன் முகத்தில் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி!

பணி முடிந்து வீட்டிற்கு தாமதமாக வருவது தொடர்பாக கணவன் – மனைவிக்குள் சண்டை ஏற்படுவது இயல்பு. ஆனால் மத்திய பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் தாமதமாக வந்த கணவருக்கு கொடுத்துள்ள தண்டனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அரவிந்த் – சிவக்குமாரி தம்பதி. திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகும் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக அரவிந்த் தினமும் பணிமுடிந்து தாமதமாக வீட்டிற்கு வருவதால் இரவு நேரங்களில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்றிரவு வழக்கம் போல் தாமதமாக வந்த அரவிந்துக்கும் அவரது மனைவிக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. அரவிந்தின் பெற்றோர் அவர்களை சமாதானப்படுத்தியதை அடுத்து இருவரும் அமைதியாக உறங்க சென்றுள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் அதிகாலை வரை தூங்காமல் கடும் ஆத்திரத்தில் இருந்த சிவக்குமாரி, நன்றாக தூங்கிக்கொண்டிருந்த கணவன் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியுள்ளார்.

அரவிந்தின் அலறல் சத்தம் கேட்டு வந்த பெற்றோர் அவரை மீட்டு அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காரப்பூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

புதிய அட்டார்னி ஜெனரலாக மூத்த வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணி நியமனம்

G SaravanaKumar

பெட்ரோல்-டீசல் விலை எத்தனை முறை உயர்த்தப்பட்டது?-மத்திய அரசு பதில்

Web Editor

விசாரணை அமைப்புகளை அச்சுறுத்துகிறார் ராகுல் காந்தி: ஸ்மிருதி இராணி

Mohan Dass

Leave a Reply