ரஷ்யாவில் இந்திய மாணவர்கள் மத்தியில் எம்.பி திருமாவளவன் சிறப்புரை

ரஷ்யாவில் பயிலும் இந்திய மாணவர்கள் மத்தியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் சிறப்புரை ஆற்றியுள்ளார். ரஷ்யாவில் உள்ள கசான் பகுதியில் நடைபெறும் உலக ஹலால் தின உச்சிமாநாட்டில், கடந்த 20-ஆம் தேதி…

ரஷ்யாவில் பயிலும் இந்திய மாணவர்கள் மத்தியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் சிறப்புரை ஆற்றியுள்ளார்.

ரஷ்யாவில் உள்ள கசான் பகுதியில் நடைபெறும் உலக ஹலால் தின உச்சிமாநாட்டில், கடந்த 20-ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்று தனது கருத்துக்களை முன்வைத்தார். அதனைத்தொடர்ந்து அவர், ரஷ்யாவில் உள்ள பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு சென்று பார்வையிட்டு வருகிறார்.

https://twitter.com/thirumaofficial/status/1528136929438380032

இந்நிலையில், ஸ்டாவ்ரோபோல் பகுதியில் உள்ள விளாதிமிர் லெனின் சிலைக்கு அவர் மரியாதை செலுத்தினார். அப்போது அவர் அங்கு முழக்கம் இடுவது போல இருக்கும் படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் அந்த படம் தற்போது பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அதேபோல, உலக போர் நினைவு சின்னம் பகுதியில் உள்ள போர் வீரன் சிலை அருகிலும், நின்று அவர் புகைப்படம் எடுத்து கொண்டார்.

https://twitter.com/news7tamil/status/1528246812058206208

அண்மைச் செய்தி: ‘இதுதான் கூட்டாட்சியா? – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி’

அதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள ஸ்டேட் மெடிக்கல் பல்கலைகழகத்தில் மருத்துவம் பயிலும் இந்திய மாணவர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றியுள்ளார். அப்போது, இந்திய மாணவர்களை ரஷ்யாவில் வந்து சந்திப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்தார். அதன்பின்னர் மாணவர்களுடன் குழு புகைப்படம் எடுத்து கொண்டார் எம்.பி தொல்.திருமாவளவன் அந்த புகைப்படங்களையும் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.