“தளபதி 67” படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
‘தளபதி 66’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 13ஆம் தேதி வெளியான விஜயின் ‘பீஸ்ட்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து, நடிகர் விஜய், பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார்.
இந்தப் படத்தில், விஜய் ஜோடியாக, பிரபல தெலுங்கு நடிகையான ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். அதேபோல, நடிகர் ஷாம், சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தமன் இசையமைக்கிறார். படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் ஹைதராபாத்தில் நிறைவடைந்தது. இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், விஜயின் “தளபதி 67” திரைப்படம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதன்படி, விஜயின் அடுத்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குவது உறுதியாகியுள்ளது. இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஜயின் பிறந்தநாளன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து, விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய லோகேஷ் கனகராஜ், தளபதி 67 பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். படம் பக்கா கிளாஸ், மாஸாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். இது விஜய் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.








