கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு தான் ’மொசாம்பிக்’. ஆப்ரிக்காவின் முக்கிய சுற்றுலா தளமான இந்நாடு அமைந்துள்ளது.
இந்த நிலையில் மொசாம்பிக்கின் பெய்ரா கடற்கரைக்கு அருகில் கடலில் உள்ள கப்பலுக்கு பணியாளர்களை படகில் ஏற்றிச் சென்ற விபத்திற்குள்ளாகியுள்ளது.
படகு கவிழ்ந்தபோது அதில் 14 இந்திய பணியாளர்களில் மூவர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் காயமடைந்துள்ளார். மேலும் 5 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து பற்றி எக்ஸில் பதிவிட்டுள்ள மோசாம்பிக் இந்திய தூதரகம், மற்றவர்களை தேடும் பணி நடந்து வருவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக பதிவிட்டுள்ளது.







