திருச்சியில் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி!

திருச்சியின்  மாநகர் பகுதிகளான  முசிறி,  சமயபுரம்,  மண்ணச்சநல்லூர் பகுதிகளில் மூடுபனி சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். ஆண்டுதோறும் அக்டோபர்,  நவம்பர்,  டிசம்பர் ஆகிய மாதங்கள் வடகிழக்கு பருவமழை மூலம் மழை பெறும் மாதங்களாகும். …

திருச்சியின்  மாநகர் பகுதிகளான  முசிறி,  சமயபுரம்,  மண்ணச்சநல்லூர் பகுதிகளில் மூடுபனி சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

ஆண்டுதோறும் அக்டோபர்,  நவம்பர்,  டிசம்பர் ஆகிய மாதங்கள் வடகிழக்கு பருவமழை மூலம் மழை பெறும் மாதங்களாகும்.  இதனைத் தொடர்ந்து கார்த்திகை,  மார்கழி மாதங்களில் பனிப்பொழிவு இருப்பது வழக்கம்.

குறிப்பாக,  அதிகாலை வேளையில் கடும் பனிப்பொழிவு காணப்படும்.  அந்த வகையில், இன்று அதிகாலையில்,  திருச்சியின்  மாநகர் பகுதிகளான  முசிறி,  சமயபுரம், மண்ணச்சநல்லூர் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது.  சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனி பொழிவு அதிகமாக இருந்ததால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.  கடும் பனிப்பொழிவு காரணமாக காலையில் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் சிரமத்துக் குள்ளாகினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.