ஆசனூர் அருகே யானையை தொந்தரவு செய்த வாகன ஓட்டிகள்!

சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூர் அருகே, யானையை தொந்தரவு செய்யும் வாகன ஓட்டிகளை வனத்துறை எச்சரிக்கை செய்தது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள 10 வனச்சரகங்களில் ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகிறது. வனப்பகுதியில் தற்போது…

சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூர் அருகே, யானையை தொந்தரவு செய்யும் வாகன ஓட்டிகளை வனத்துறை எச்சரிக்கை செய்தது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள 10 வனச்சரகங்களில் ஏராளமான
வன விலங்குகள் வசித்து வருகிறது. வனப்பகுதியில் தற்போது கடும் வறட்சி
நிலவுவதால், உணவு மற்றும் தண்ணீர் தேடி வன விலங்குகள் விவசாய தோட்டத்தில்
புகுவது தொடர்கதையாகி வருகிறது. தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களை
இணைப்பதாக சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

மேலும், யானைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் உணவு தேடி சாலையை கடந்து
செல்வது வழக்கம். இந்நிலையில், வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டி யானை
ஒன்று, ஆசனூர் அருகே மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றது. அப்போது
இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹாரன் அடித்தும், சத்தங்களை எழுப்பியும் யானை
துன்புறுத்துதலில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது கோபம் கொண்ட யானை முகத்தை வேகமாக திருப்பி முறைத்து
பார்த்தவுடன், வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து ஓட்டம் பிடித்தனர். இந்த
செயலை பின்னே நின்று கொண்டிருந்த சுற்றுலா வாகன ஓட்டி ஒருவர்,
வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

—கு.பாலமுருகன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.