நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது -மத்திய சுகாதாரத்துறை தகவல்

நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த 2 நாட்களாக படிப்படியாக குறைந்து வருகிறது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் 53 ஆயிரத்து…

நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த 2 நாட்களாக படிப்படியாக குறைந்து வருகிறது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் 53 ஆயிரத்து 852 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7 ஆயிரத்து 533 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் கொரோனா தொற்றால் 28 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 11 ஆயிரத்து 47 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஒரே நாளில் 2 லட்சத்து 8 ஆயிரத்து 112 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.