முக்கியச் செய்திகள் தமிழகம்

அம்மா அரங்கம்; வாடகைக்கு விடச் சென்னை மாநகராட்சி அனுமதி

செனாய் நகரில் அமைந்துள்ள அம்மா அரங்கத்தைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வாடகை அடிப்படையில் அளிக்க அனுமதி அளித்தது சென்னை மாநகராட்சி.

அண்ணாநகர் மண்டலத்துக்கு உட்பட்ட சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான அம்மா அரங்கத்தை முழுவதுமாக பயன்படுத்தி வருவாயைப் பெருக்கும் விதமாகப் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வாடகை அடிப்படையில் அனுமதி அளிக்கச் சென்னை மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. 200க்கும் மேற்பட்ட இருசக்கர நான்கு சக்கர வாகன நிறுத்தம், குளிரூட்டப்பட்ட அரங்கம், விலை உயர்ந்த அரங்குகள் என மிகவும் அழகுற வடிவமைக்கப்பட்ட அம்மா அரங்கத்தினை பொதுமக்களுக்கு வாடகைக்கு விடத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதன்படி முழு கட்டடத்திற்கான புதிய வாடகை கட்டணமாக முழு நாளுக்கு ரூபாய் 3,40,360 என்றும் அரை நாள் வாடகை கட்டணமாக 1,70,180 என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த தொகை ஜிஎஸ்டி, மின்சாரம் மற்றும் இதர செலவுகள் உள்ளடக்கியதாகும்.

அண்மைச் செய்தி: ‘அதிமுக பொதுக்குழு; விசாரணைக்கு வரும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு?’

மேலும் மத்திய அரசு,மத்திய அரசு சார்ந்த நிறுவனங்கள் நிகழ்ச்சிகள் நடத்தும் போது 50% சலுகையுடனும் , அரசு மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளுக்கு வாடகைத் தொகை தவிர்த்து இதர கட்டணங்கள் செலுத்துவதற்குச் சலுகை வழங்கவும், பெருநகர சென்னை மாநகராட்சி பணியில் இருக்கும் ஊழியர் மற்றும் மாமன்ற உறுப்பினர் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு 75 விழுக்காடு சலுகை வழங்கி அனுமதிக்கலாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அம்மா அரங்கத்தை அளிக்கும்போது ஏற்கனவே கீழ்த்தளத்தில் உள்ள மின்சாரம் மற்றும் சாதாரண இரண்டு சக்கர வாகனங்கள் பணிமனையை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்ற ஏற்பாடு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 102வது வார்டு மாமன்ற உறுப்பினர் கடந்த மாதம் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் வலியுறுத்தியதன் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பேரறிவாளன் வழக்கு கடந்து வந்த பாதை

Halley Karthik

சிறை கைதி தப்பி ஓட்டம் – தலைமை காவலர் பணியிடை நீக்கம்

Dinesh A

கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மரியாதை

EZHILARASAN D