இந்தியா, அயர்லாந்து இடையேயான கடைசி போட்டி இன்று நடைபெறுகிறது. தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி களம் காண இருக்கிறது.
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இரண்டு தொடர்கள் கொண்ட டி20 போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டிக்கு இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை கேப்டான பிசிசிஐ நியமித்துள்ளது .
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதன் முதல் போட்டி 26ம் தேதி டப்ளினில் நடந்தது. இதில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இறுதி வரையில் தீபக் ஹூடா 47 ரன்னும் (29 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), தினேஷ் கார்த்திக் 5 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர். 11 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றிய இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் 2 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இதே மைதானத்தில் இன்று நடக்கிறது. அயர்லாந்துக்கு எதிராக 20 ஓவர் போட்டியில் இதுவரை 4 முறை மோதி இருக்கும் இந்திய அணி அந்த 4 ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளது. அதே வெற்றியை தக்க வைக்கும் முனைப்புடன் இந்திய அணி இப்போட்டியை எதிர்கொள்கிறது.
இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு மலாஹெட் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென் 3, சோனி டென் 4 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.